சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்
சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்
UPDATED : ஏப் 20, 2024 10:42 PM
ADDED : ஏப் 20, 2024 07:40 PM

சென்னை: சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று
தமிழகத்தில் நடைபெற்ற முதற்கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள்
சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதைடுத்து இன்று மாலை வெளியான தகவலின்
படி 69.46 சதவீதம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி லோக்சபா
தொகுதியில் 81.48 சதவீதமும், மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் 53.91
சதவீதமும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது
குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியது,
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது சட்டமன்ற
தொகுதிவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக
வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதிப்படுத்தி வகின்றனர். 39 தொகுதிகளிலும் சுமூகமாக தேர்தல் நடந்துள்ளதால் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்சென்னை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 % வாக்குகளை குறைத்து அறிவித்துள்ளது.
மத்திய சென்னையில் முதலில் அறிவித்ததை விட 13.44 % குறைத்தும், தூத்துக்குடியில் முதலில் அறிவித்ததை விட 10.97 % குறைத்தும்
வடசென்னையில் முதலில் அறிவித்ததை விட 9.13 % குறைத்தும், ஸ்ரீபெரும்புதூரில் முதலில் அறிவித்ததை விட 9.56% குறைத்தும்
சென்னையில் முதலில் அறிவித்ததை விட 8.36% குறைத்தும்,கோவையில் முதலில் அறிவித்ததை விட 6.36% வாக்குகள் குறைத்தும்
குமரியில் முதலில் அறிவித்ததை விட 4.69% குறைத்தும்,திருச்சியில் முதலில் அறிவித்ததை விட 3.79% வாக்குகள் குறைத்தும்
சிவகங்கையில் முதலில் அறிவித்ததை விட 7.11 % குறைத்தும் மதுரையில் முதலில் அறிவித்ததை விட 7.06% வாக்குகள் குறைத்தும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

