ADDED : மே 22, 2025 05:39 AM

அரக்கோணம் தி.மு.க., இளைஞரணி நிர்வாகியால், கல்லுாரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரக்கோணம் கல்லுாரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், 10ம் தேதியே வழக்கு பதிவு செய்ததாக கூறும் போலீசார், இதுவரை தி.மு.க., நிர்வாகியை கைது செய்யவில்லை. மாறாக, போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்களை, தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலை மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு, அச்சுறுத்த முயற்சித்த தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது. இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது, தி.மு.க., அரசின் கடமை.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்.