ADDED : டிச 29, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டகசாலை போன்றவை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் காஸ் ஏஜன்சிகளை நடத்தி வருகின்றன.
தற்போது, 54 பெட்ரோல் பங்க்குகள் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு அதிகளவில் பெட்ரோல் பங்க், காஸ் ஏஜன்சி உரிமம் வழங்குமாறு, மத்திய எண்ணெய் நிறுவனங்களை, மத்திய கூட்டுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், 60 பெட்ரோல் பங்க்குகளை துவக்க அனுமதி கேட்டுள்ளன.