தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கவர்னர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு மசோதா மீண்டும் நிறைவேற்றம்

 கவர்னர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு மசோதா மீண்டும் நிறைவேற்றம்

 கவர்னர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு மசோதா மீண்டும் நிறைவேற்றம்


ADDED : ஜன 25, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கவர்னர் ரவி திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில், 2024 டி சம்பர் 10ம் தேதி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு விளக்கங்களை கேட்டு, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார் .

இந்த சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு, காங்கிரஸ், பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பை பதிவு செய்த னர். பின்னர், மீண்டும் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:

கூட்டுறவு சங்கங்கள் சட்டம் கடந்த 1983ல் கொண்டு வரப்பட்டது. கூட்டுறவு துறை வாயிலாக, சங்கங்களின் பாதுகாப்புக்காக சில சீர்த்திருத்தங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முறைகேடு களில் ஈடுபடும் சங்கங்களை கலைக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர, சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை கவர்னர் திருப்பி அனுப்பினார். எனவே, அந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us