ADDED : ஜூன் 10, 2026 08:12 AM

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து, இந்த ஒரு மாதத்தில் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் உள்ளன.
பல்வேறு குற்ற சம்பவங்களில், ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த ஆட்சியை, ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாக போவதால், அவர் விமர்சித்தார்.
இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், இந்த ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக் குறியோடு தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்ற பொருளில் தான் ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார்.
ஆனால் அதை, மூன்று மாதங்களில் ஆட்சி கலைந்து விடும் என, அவர் சொன்னதாக திரித்து பரப்பப்படுகிறது. த.வெ.க., ஆட்சி கவிழும் என, ஸ்டாலின் பேசவும் இல்லை; அது, தி.மு.க.,வின் நிலைப் பாடும் இல்லை.
- தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,
