ADDED : மார் 18, 2024 01:28 AM
திருச்சி: மலேஷியாவில் வசிக்கும் ப்ரீத்திகா, தந்தை சந்திரன், தாய் வனிதா மற்றும் உறவினர்களுடன், சில நாட்களுக்கு முன், மலேஷியாவில் இருந்து திருச்சி வந்தார்.
சமயபுரம் கோவில், அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில்களுக்கு சென்றவர், சிறுகனுார் டோல்கேட் அருகே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, காரைக்குடி புறப்பட்டனர்.
அப்போது சந்திரன் கைப்பையை ஹோட்டலில் தவற விட்டனர். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று பார்த்த போது, பை இல்லை. சமயபுரம் போலீசில் சந்திரன் புகார் செய்தார்.
போலீசார், ஹோட்டல் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஹோட்டல் துப்புரவு பணியாளர் அலமேலு, 42, அவரது கணவர் அலெக்ஸ், 47, கைப்பையை எடுத்தது தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரித்த போது, கைப்பையில் இருந்த மலேஷியா பணம், 4 கிராம் தங்க செயின் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பாஸ்போர்ட்டை எரித்து விட்டதாக தெரிவித்தனர். பணம், நகையை பறிமுதல் செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

