நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்
ADDED : நவ 20, 2024 05:58 PM

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கடந்த 16 ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான அவரை, நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர், '' சிறப்பு குழந்தை உள்ளது. சிங்கிள் மதர் என்பதால் ஜாமின்'' வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.