ADDED : ஜூலை 30, 2025 04:49 AM

சென்னை: 'நாம் தமிழர் கட்சி யின் சார்பில், தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தேனி மாவட்டம், பங்களாமேட்டில், 'பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை' என்ற முழக்கத்தை முன்வைத்து, தேவேந்திர குல வேளாளர்களுக்காக, ஆக., 2ல் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில், தேவேந்திர குல வேளாளர்களை, பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, வலியுறுத்தப்படும்.
அடுத்த நாள் ஆக., 3ல், தீரன் சின்னமலை உருவ சிலைக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு, மதுரை ஆடு - மாடுகள் மாநாட்டில் அறிவித்தபடி, தடையை தகர்த்து, மாடுகளை நாமே மலைமேல் ஏற்றி மேய்க்கிற போராட்டம் நடக்க உள்ளது.
இந்த போராட்டம், தேனி முந்தல், அடவுப்பாறை பகுதியில் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

