ADDED : ஜூலை 12, 2011 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் பரமசிவன்(60).
கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் இவரிடம் கருவந்தா கிராமத்தை சேர்ந்த ஹரிராம்(51) வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். மாலையில் வட்டிப்பணத்தை வாங்க பரமசிவன், சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமுற்ற ஹரிராம், பரமசிவத்தை அரிவாளால் வெட்டினார். பரமசிவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.