sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிரைம்: கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்

/

கிரைம்: கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்

கிரைம்: கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்

கிரைம்: கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்


ADDED : ஜன 30, 2024 07:56 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில், ஜன., 20-ல் பங்கு பேரவை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்துார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தி.மு.க., செயலர் ரமேஷ் பாபு நேற்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதில் தொடர்புடைய 10 பேரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராபின்சனை காவலில் எடுத்து விசாரிக்க இரணியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முகநுாலில் லிங்க் அனுப்பி ரூ.28.21 லட்சம் மோசடி


திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரை சேர்ந்தவர் பிரபாகரன், 33; பட்டதாரி. இவரது முகநுால் பக்கத்தில், டிச., 27ல் வந்த ஒரு தகவலில், பகுதிநேர வேலை உள்ளதாகவும், இதில், அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, ஒரு லிங்க் வந்துள்ளது.

அதில், பிரபாகரன் விபரம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ஒரு வங்கி கணக்கை கொடுத்து, அதில் பணம் செலுத்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என, கூறினர். பிரபாகரன், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். அப்போது, வங்கி கணக்கில் பணம் கிடைத்துள்ளது. இதை நம்பிய அவர், தொடர்ந்து பல்வேறு தவணைகளில், 28.21 லட்சம் ரூபாய் செலுத்தினார்.

ஆனால், அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபாகரன் புகார் படி, திருப்பத்துார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இமானுவேல் பேரவை நிர்வாகி கைது


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் பட்டியலின வகுப்பினரின் மயானத்தை சேதபடுத்தி ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தாலுகா அலுவலகம் முன்பு தியாகி இமானுவேல் பேரவை சார்பாக குடியமரும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சமாதான கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்து அனைவரும் சென்றனர். அதன்பிறகு பேரவை கிழக்கு மாவட்ட செயலர் பாகனுார் கணேசன் 40, தாசில்தாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக வி.ஏ.ஓ., நாகேந்திரன் புகாரில் கணேசனை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கிச்சூடு: 52 பேர் பலி


சூடானில், நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர், கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஐ.நா.,வின் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 52 பேர் பலியாகினர்; 64 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.நா., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர் படுகொலை


ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, 25, என்ற மாணவர், இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார். ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் தங்கியிருந்த அவர், சமீபத்தில், எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்தார்.

இதற்கிடையே, லித்தோனியா நகரில் உள்ள கடை ஒன்றில், விவேக் சைனி பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இங்கு ஏற்கனவே தங்கி பணிபுரியும் ஜூலியன் பால்க்னர் என்பவரிடம், அவர் கடந்த சில நாட்களாக அக்கறையுடன் பழகி வந்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி விவேக் சைனி வீட்டிற்குச் செல்லும் போது பின்தொடர்ந்து வந்த ஜூலியன் பால்க்னர், சுத்தியலால் அவரை தாக்கினார். தலையில், 50 முறை தாக்கப்பட்டதில், சம்பவ இடத்திலேயே விவேக் சைனி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் கைது


சத்தீஸ்கரில் ஹிந்து கடவுள்களுக்கு எதிராக கிராம மக்களை உறுதிமொழி எடுக்கச் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.

4 பேருக்கு துாக்கு


இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து, நாசவேலையில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு ஈரானில் நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us