sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிரைம்: வீட்டிலேயே பிரசவம்; தாய், சேய் பலி: கணவர் கைது

/

கிரைம்: வீட்டிலேயே பிரசவம்; தாய், சேய் பலி: கணவர் கைது

கிரைம்: வீட்டிலேயே பிரசவம்; தாய், சேய் பலி: கணவர் கைது

கிரைம்: வீட்டிலேயே பிரசவம்; தாய், சேய் பலி: கணவர் கைது

3


ADDED : பிப் 22, 2024 07:15 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:15 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நயாஸ். இவரது மனைவி சமீரா பீவி, 36. ஒன்பது மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் சமீரா பீவியின் உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சமீராவை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். கர்ப்பிணி இறந்ததை அறிந்த அப்பகுதி கவுன்சிலர் தீபிகா, இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கர்ப்பிணியாக இருந்த சமீரா பீவியை, அவரது கணவர் முறையாக மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்யவில்லை; அக்குபஞ்சர் செய்யும் நபரை வீட்டிற்கு அழைத்து சிகிச்சை பார்த்துள்ளார்.

இது சமீராவுக்கு நான்காவது குழந்தை. ஏற்கனவே பிறந்த மூன்று குழந்தைகளும் அறுவை சிகிச்சை வாயிலாகவே பிறந்தன. அதனால், அவருக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. இதை, ஆஷா சுகாதார பணியாளர் கூறிய போதும் நவாஸ் கேட்க மறுத்ததுடன், மனைவியை சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை. எங்களுடன் அவரை பேச விடாமல் தடுத்து வைத்திருந்தார்.

முறையான சிகிச்சை பெற அனுமதியுங்கள் என கேட்டதற்கு, சுகப்பிரசவம் நடக்க யுடியூப் வீடியோக்களை பார்த்து கற்று வைத்திருப்பதாக கூறினார். இந்நிலையில் தான் அவரது மனைவியும், குழந்தையும் இறந்துள்ளனர். இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.

தண்டவாளத்தில் மாட்டு தலை; ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு


குஜராத் மாநிலம், காந்தி தாமிலிருந்து பிப்., 19-ல் புறப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. பார்வதிபுரம் ரயில்வே கேட்டை கடந்து, பாலத்தின் அடியில் சென்ற போது தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டுள்ளதை கவனித்த பைலட், ரயிலின் வேகத்தை குறைத்தார்.

எனினும் கற்கள் மீது ரயில் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் 15 நிமிடம் அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டு புறப்பட்டு சென்றது. பாறாங்கற்களுடன் இறந்து போன மாட்டின் தலை எலும்பு கூடு போன்றவற்றை வைத்திருந்ததால், சதிவேலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

கல்லில் மோதி ரயில் நின்ற சிறிது நேரத்தில் சிலர் அப்பகுதியில் உள்ள புதரில் இருந்து வெளியே வந்து பைக்கில் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எஸ்.பி., சுந்தரவதனம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

2 வயது மகனை கிணற்றில் வீசி கர்ப்பிணி தற்கொலை


தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டினத்தைச் சேர்ந்த முருகன் மகள் காளீஸ்வரி 23. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த மாரியப்பன் 26, என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தேவிபட்டினத்தில் வசித்தனர். மாரியப்பன் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களது மகன் கவிபிரகாஷ் 2. மாரியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான காளீஸ்வரி அதனை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று மாலை 4:00 மணிக்கு விவசாயக் கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்த காளீஸ்வரி தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தை உடல் கிணற்றில் மிதப்பதை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் முதலில் குழந்தை உடலையும் பின்னர் காளீஸ்வரி உடலையும் மீட்டனர். சிவகிரி போலீசார் மாரியப்பனிடம் விசாரித்தனர்.

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'


தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலையைச் சேர்ந்தவர் பாஞ்சாலை, 60; இவர், நேற்று முன்தினம் பகல், 12:20 மணிக்கு, அரூரிலிருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில், பாத்திரத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றார். இதைப் பார்த்த பஸ் கண்டக்டர், மோப்பிரிப்பட்டி அருகே, நடுவழியிலேயே பாஞ்சாலையை இறக்கி விட்டார்.

இதை அறிந்த, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர், பெண் பயணியை பாதுகாப்பில்லாமல் நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர் சசிகுமார், கண்டக்டர் ரகு ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.

பல லட்சம் ரூபாய் மோசடி; வாலிபர் சிறையிலடைப்பு


நாமக்கல் மாவட்டம், செல்லம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ், 34. எம்.ஏ., பொருளாதார பட்டதாரி. இவர் சமூக வலைதளங்களில், 'கேஷ் பே' செயலி வாயிலாக லோன் பெற்றுத் தருவதாகவும், ஆவணங்கள் தேவையில்லை எனவும் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த ஏராளமானோர், அவரை தொடர்பு கொண்டனர்.

இதையடுத்து அவர் கடன் பெறுவதற்காக, செயல்பாட்டு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை பெற்றார். ஆனால், யாருக்கும் கடன் பெற்றுத் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்குப் பதிந்த போலீசார், சதீசை சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட நபர், மாநிலம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார். இரு ஆண்டுகளாக அவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்' என்றார்.

அரசு அதிகாரி தற்கொலை


திருநெல்வேலி என்.ஜி.ஓ., ஏ காலனியை சேர்ந்தவர் கண்ணன் 56. உள்ளாட்சி தணிக்கை துறை ஆய்வாளர். அவரது மனைவி ஜெயந்தி 52, மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ஒரு மகள் உள்ளார். கண்ணன் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். பண இழப்புகள் ஏற்பட்டன. பிப்., 16ல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் மனைவி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ரெட்டியார்பட்டி மலை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவில் அவரது உடல் மீட்கப்பட்டது.

மதுரை ரவுடி கொலை; 5 பேர் சரண்


ரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடா கோயில் அருகே டூவீலரில் வந்த மதுரை ரவுடி ராமர் பாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 5 நாள் விருதுநகர் சிறையில் நடுவர் அடைக்க உத்தரவிட்டார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரும் விருதுநகர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மாணவியின் தாய்க்கு கொலை மிரட்டல்


கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மங்களூரு ஜெரோசா பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர், சமீபத்தில் மாணவி ஒருவரிடம் கடவுள் ராமரை பற்றியும், குங்குமம் குறித்தும், அவதுாறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

மாணவி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. மாவட்ட கல்வி அதிகாரியிடமும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ராமரை பற்றி அவதுாறாக பேசிய ஆசிரியைக்கு எதிராக, மாணவியின் தாய் கவிதா என்பவர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில், கவிதாவுக்கு வெளிநாட்டில் இருந்து, இ - மெயில் மூலம், சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் கவிதாவை பற்றி அவதுாறான கருத்தையும் பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்படி, கங்கனாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இ - மெயில் வந்த முகவரியை வைத்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கவிதாவும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருந்தார். இந்த பிரச்னைக்கு பின், அவரையும், பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது.






      Dinamalar
      Follow us