ADDED : டிச 03, 2024 12:35 AM
இடமிருந்து வலம்
1. அள்ள அள்ள குறையாத உணவு பாத்திரம்.
6. குதிரை, மாடு போன்றவற்றின் பாதம்.
7. திருப்பதி ஒரு புண்ணிய ___.
8. '___ ___பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா'
12. ___ உடையான் படைக்கு அஞ்சான்.
13. உப்பு தயாரிக்கும் களம்.
14. ஒருவகை கால்பந்து விளையாட்டு.
16. இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால், அவனுக்கு ___ ___---- எடுத்தது.
18. ___, கேழ்வரகு போன்றவை தினை வகைகள்.
20. சாப்பிட்டதும் தன் வயிறு ___ மென்று இருப்பதாக உணர்ந்தான்.
21. மகாவீரர், 'இந்த' மதத்தைப் பரப்பினார்.
22. ___ ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
மேலிருந்து கீழ்
1. பார்வை இழந்தவன்.
2. 'இது' புரிந்தால் வரம் கிடைக்கும்.
3. பிறர் அறிய கூடாதது.
4. ஆற்றில் போட்டாலும் ___ போட வேண்டும்.
5. பைசா நகரத்து சாய்ந்த ___.
9. பிறப்பு துவக்கம்; ___ முடிவு. இதுதான் வாழ்க்கை!
10. இந்த கூழை ___என்னிடம் செல்லாது.
11. கேலி.
12. ___ ___யத்தில் வந்து கைகொடுத்தாய்; மிகவும் நன்றி.
15. மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பாயும் ஒரு நதி.
17. சிவாஜி, முஸ்லிம் மன்னர்களுக்கு ___ சொப்பனமாக இருந்தார்.
18. காந்திஜிக்கு பிடித்த உடை வகை.
19. ஒன்று நஞ்சை; மற்றது?
விடைகள்
இடமிருந்து வலம்
1.அமுதசுரபி
6.குளம்பு
7.தலம்
8.காயமே இது
12.தம்பி
13.உப்பளம்
14.ரக்பி
16.கடும் பசி
18.கம்பு
20.திம்
21.சமணம்
22.மலர்மிசை
மேலிருந்து கீழ்
1.அந்தகன்
2.தவம்
3.ரகசியம்
4.அளந்து
5.கோபுரம்
9.இறப்பு
10.கும்பிடு
11.ஏளனம்
12.தக்கசம
15.தபதி
17.சிம்ம
18.கதர்
19.புஞ்சை