சி.எஸ்.கே., அணியில் மீண்டும் களம் இறங்கும் தோனி! ரசிகர்கள் ரொம்ப ஹேப்பி
சி.எஸ்.கே., அணியில் மீண்டும் களம் இறங்கும் தோனி! ரசிகர்கள் ரொம்ப ஹேப்பி
ADDED : அக் 31, 2024 06:07 PM

சென்னை: வரும் 2025ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., போட்டியில் மீண்டும் சி.எஸ்.கே., அணிக்காக தோனி விளையாடுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை ஐ.பி.எல்., அணியை பொறுத்தவரையில் யார் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதேபோல, ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள தோனி, 2025 ஐ.பி.எல்., தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 2025ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., போட்டியில் மீண்டும் சி.எஸ்.கே., அணிக்காக விளையாடுவது உறுதியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை அணி நிர்வாகம் தக்க வைத்தது.
சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரனா, ஷிவம் டுபே தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ருத்துராஜ்- ரூ.18 கோடி
ஜடேஜா- ரூ. 18 கோடி
பதிரனா - ரூ.13 கோடி
துபே - ரூ.12 கோடி
சி.எஸ்.கே., அணிக்காக தோனி மீண்டும் களம் இறங்கி விளையாட இருப்பது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
மும்பை அணியில் ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் திலக் வர்மா ஆகியோர் நீடிக்கின்றனர். பெங்களூர் அணியில் ரூ. 21 கோடிக்கு விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளார்.