ADDED : நவ 25, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சிட்டி யூனியன் வங்கியின், 900வது கிளை, உ.பி., மாநிலம் ஆக்ரா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கும்பகோணத்தை தலைமையிடமாக வைத்து, சிட்டி யூனியன் வங்கி, 1904ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பல்வேறு வழிகளில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் கிளைகள் நாட்டில் உள்ள, 18 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் இயங்கி வருகின்றன.
வங்கியின் 900வது கிளை, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் திறக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களை மையமாக வைத்து, இக்கிளை திறக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழாவில், சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர்கள் விஜய் ஆனந்த், ரமேஷ், தேசிய சிறு தொழில் கழக இணை பொது மேலாளர் சமீர் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

