தப்பியோடிய திருடன் மீது கடலூர் போலீஸ் துப்பாக்கிச்சூடு
தப்பியோடிய திருடன் மீது கடலூர் போலீஸ் துப்பாக்கிச்சூடு
UPDATED : மார் 20, 2025 11:27 AM
ADDED : மார் 20, 2025 08:35 AM

கடலூர்: கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தப்பியோடிய திருடன் ஸ்டீபனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில், திருடன் ஸ்டீபன் போலீசாரை கண்டதும் தப்பியோடினான். அவனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுப்பிடித்தனர். இவன் சிதம்பரம் அருகே 10 சவரன் நகை, லேப்டாப், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடி உள்ளான். இவன் திருடப்பட்ட நகைகளை சித்தாலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளான்.
நகைகளை மீட்க சென்ற போலீசாரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு ஸ்டீபன் தப்பி ஓட முயற்சி செய்தான். அப்போது போலீசார் திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் கால் முட்டியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டீபன் மீது குமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.