தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது; வங்க கடலில் உருவானது ஒர்னாப் புயல்

மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது; வங்க கடலில் உருவானது ஒர்னாப் புயல்

மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது; வங்க கடலில் உருவானது ஒர்னாப் புயல்

2


UPDATED : அக் 26, 2026 03:22 PM

ADDED : அக் 26, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : அக் 26, 2026 03:22 PM ADDED : அக் 26, 2026 07:15 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர்-

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது; மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 15 கி.மீ வேகமாக நகர்ந்து வருகிறது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவின் கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 830 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ' ஒர்னாப் புயல் இன்று (அக்டோபர் 26) உருவானது. நாளை தீவிர புயலாக மாறி, நாளை மறுநாள் (அக்டோபர் 28) விசாகப்பட்டினம் மற்றும் பபாத்லா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

விடுமுறை விவரம்!

* கோவை

* திண்டுக்கல்

* ராமநாதபுரம்

* நாகை

* பெரிய குளம் தாலுகாவுக்கு மட்டும்

ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* நீலகிரியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொரசக்குறிச்சி

* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விருகாவூர்

அரசு மேல்நிலைப்பள்ளி, விருகாவூர்

* அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விருகாவூர்.

சின்னசேலம் வட்டாரம்

* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈரியூர்

* தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புயல் எச்சரிக்கை கூண்டு!

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதன் விபரம்:

* சென்னை,

* கடலூர்,

* நாகை

* எண்ணூர்

* காட்டுப்பள்ளி

* புதுச்சேரி

* காரைக்கால்

* பாம்பன்

* தூத்துக்குடி

சிறப்பு வீடியோ!

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us