'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி
'பெஞ்சல்' புயல் நிவாரணம் : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி
ADDED : டிச 06, 2024 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'பெஞ்சல்' புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன், 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கினார்.