அரபிக்கடலில் நிலவும் சக்தி புயல்: தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை
அரபிக்கடலில் நிலவும் சக்தி புயல்: தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை
ADDED : அக் 04, 2025 01:10 PM

சென்னை: தமிழகத்தில் இன்றும் (அக் 04), நாளையும் (அக் 05) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கரையை கடக்காமல் கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மஹாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
1. திருப்பத்தூர்
2. கிருஷ்ணகிரி
3. தர்மபுரி
4. சேலம்
5. நாமக்கல்
6. திருச்சி
7. திண்டுக்கல்
8. தேனி
9. மதுரை
10. சிவகங்கை
11. விருதுநகர்
12. ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.