sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தித்வா புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

/

தித்வா புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தித்வா புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தித்வா புயல் எதிரொலி; 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

6


UPDATED : நவ 29, 2025 06:06 AM

ADDED : நவ 28, 2025 09:44 AM

Google News

UPDATED : நவ 29, 2025 06:06 AM ADDED : நவ 28, 2025 09:44 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் தித்வா புயல் காரணமாக, இன்று (நவ., 29) தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தற்போது வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 540 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த தித்வா புயல், தற்போது வடக்கு, வடமேற்கு திசையில் நோக்கி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 540 கி.மீ., தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் தித்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது.

இன்று (நவ.,29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

* மயிலாடுதுறை

இன்று (நவ.,29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* திருவண்ணாமலை

* கள்ளக்குறிச்சி

* சேலம்

* பெரம்பலூர்

* திருச்சி

* அரியலூர்

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

இன்று(நவ.,29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* வேலூர்

* திருப்பத்தூர்

* கிருஷ்ணகிரி

* தரம்புரி

* நாமக்கல்

* கரூர்

நாளை (நவ.,30) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* ராணிப்பேட்டை

நாளை மறுநாள் (நவ.,30) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

*சென்னை

* வேலூர்

* திருப்பத்தூர்

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

நாளை மறுநாள் (நவ.,30) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* சேலம்

டிசம்பர் 1ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை கூண்டு


துறைமுகத்திற்கு வெகு துாரத்தில் புயல் உருவாகி மோசமான வானிலை நிலவுவதை அறிவிக்கும் பொருட்டு காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

விடுமுறை


தமிழகத்தில் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us