ADDED : நவ 09, 2024 11:22 PM

விருதுநகர் கள ஆய்வு, திட்ட பணி துவக்க விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் சூலக்கரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்த போது அங்கிருந்த மாணவிகள் அவரை அப்பா என அழைத்ததால் நெகிழ்ச்சி அடைந்தார்.
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் திருமண மண்டபம் வரை இருபுறமும் கட்சியினர், மக்கள் கூடி வரவேற்றனர்.
முன்னதாக விருதுநகர் சூலக்கரையில் செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்காக அவரே பேக்கரி சென்று கேக் வாங்கி வந்து மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அங்கிருந்த சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அய்யரம்மாள், முதல்வரை அப்பா என அழைத்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அப்பா நிறைவான நாள் என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.