ADDED : ஜன 10, 2025 07:13 PM

குறை தீர்ப்பார்
தர்மபுரியில் உள்ள தர்மபுரி நகர் கோட்டை கோயிலில் வரலட்சுமியுடன் அருள்புரிகிறார் பரவாசுதேவர். இவரை தரிசித்தால் குறைகள் தீரும். நிறைவான வாழ்வு அமையும். சால கோபுரத்தை கடந்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வாரை தரிசித்து விட்டு கோயிலுக்குள் செல்லலாம். கருவறையில் ஏழு தலை ஆதிசேஷன் படமெடுக்க அதன் மீது குத்துக்காலிட்ட கோலத்தில் தாயாரை மடியில் இருத்தியவாறு சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார் பரவாசுதேவர்.
இங்கு இவரை பிரம்மா பிரதிஷ்டை செய்யவே, தேவர்களும் முனிவர்களும் வழிபட்டுள்ளார்கள். இப்பெருமாளின் திருவடியின் கீழ் கருடாழ்வாரும், அனுமனும் ஒரு சேர அவரை வணங்கியவாறு இருக்கிறார்கள். இக்காட்சியை வேறு எங்கும் காண முடியாது. சேனை முதலியார், ராமானுஜர், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சன்னதிகள் உள்ளன. இங்கு தலவிருட்சங்களாக மூன்று மரங்கள் உள்ளன.
தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:30 மணி மாலை 4:30 - 8:30 மணி
அருகிலுள்ள தலம்: கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் 1 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:30 மணி மாலை 5:00 - 12:00 மணி

