ADDED : ஜன 11, 2025 06:33 PM

தொழில் சிறக்க...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பழைய அக்ரஹாரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்கிறார் சீனிவாச பெருமாள். இவரை வழிபட்டால் தொழில் சிறக்கும்.ஊட்டி மார்க்கெட்டில் தானிய விற்பனை செய்து வரும் தாசபிளஞ்சிகர் சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்டது இக்கோயில். 1950ல் கும்பாபிஷேகமும் நடந்தது. புரட்டாசி சனிக்கிழமை தோறும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் வீதியில் வலம் வருகிறார். அப்போது பெருமாளை தரிசித்தால் ஒளிமயமான வாழ்வு அமையும்.
கோயில் வளாகத்தில் ஆழ்வார்கள், ஆச்சாரிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. இங்கு ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடக்கிறது.
ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98940 42829, 94422 61664
அருகிலுள்ள தலம்: அனுமன் கோயில்
நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:00 மணி