கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு: கவர்னர் ரவி பேச்சு
கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு: கவர்னர் ரவி பேச்சு
ADDED : ஜூன் 25, 2024 05:18 PM

சென்னை: கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடை பெற்றுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருட்கள் வெளியில் இருந்து வருவதில்லை. இங்கேயே உருவாக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடை பெற்றுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
அடிமை
கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கிறது. கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்தால் விழுப்புரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே போல மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தை போதைப்பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.