ADDED : ஏப் 18, 2024 11:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:  அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மீது தி.மு.க., எம்.பி., தயாநிதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என இ.பி.எஸ்., தவறாக பேசியுள்ளார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  உள்ளதாக தயாநிதி மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

