கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தகவல்
கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தகவல்
ADDED : டிச 29, 2025 06:10 AM

சேலம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக ராமதாஸ் நேற்று சேலம் வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், “சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட, பொதுக்குழு எனக்கு முழு அதிகாரம் வழங்கும்,” என்றார். பொதுக்குழு குறித்து உருக்கமாக அவர் வெளியிட்ட வீடியோ குறித்து கேட்டபோது, “பொதுக்குழுவில் என் பேச்சை கேட்டுவிட்டு, என்னை சந்தியுங்கள்,” என கூறினார்.
அதன்பின் பா.ம.க., கவுரவ தலைவர் மணி அளித்த பேட்டி: வீடியோ வாயிலாக ராமதாஸ் பேசிய உருக்கமான பேச்சு, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளாக மாறும். கூட்டணி குறித்து, மாவட்ட வாரியாக பா.ம.க., நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டார். அவர் அமைக்கும் கூட்டணி தான், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, யாரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. அன்புமணியுடன் சென்ற நிர்வாகிகள் அனைவரும், மீண்டும் ராமதாஸ் பின்னால் வருவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

