sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

/

அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

அடுத்தாண்டு கூட்டணி குறித்து முடிவு: பொதுக்குழுவில் பிரேமலதா அறிவிப்பு

7


ADDED : மே 01, 2025 01:01 AM

Google News

ADDED : மே 01, 2025 01:01 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தையில் நேற்று நடந்த தே.மு.தி.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், பிரேமலதா பொதுச்செயலராகவும், அவர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலராகவும், நான்கு புதிய துணை செயலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழுவில் ஒன்பது பேர் அடங்கிய தலைமை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலராக இருந்த பிரேமலதா, அவைத்தலைவராக இருந்த இளங்கோவன் அப்பதவியில் தொடர்கின்றனர்.

மோதிரம் அணிவிப்பு


துணைச்செயலராக இருந்த பிரேமலதாவின் தம்பி சுதீஷ், பொருளாளராகவும், துணை தலைவராக இருந்த பார்த்தசாரதி தலைமை நிலைய செயலராகவும், கொள்கை பரப்பு செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், துணை செயலர்களாக பன்னீர்செல்வம், சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சுபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த, ஒன்பது பேரும் தே.மு.தி.க., தலைமை கழக நிர்வாகிகளாக இருந்து செயலாற்றுவர் என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அதேபோல நிர்வாகிகள் பலரும் கேட்டு கொண்டதற்கிணங்க, விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்கப்படுவதாக அறிவித்து, விஜயகாந்த் அணிந்த மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு பிரேமலதா அணிவித்தார்.

பின், பிரேமலதா பேசியதாவது:



கடலுாரில் அடுத்தாண்டு நடத்தப்படவிருக்கும் கட்சி மாநாட்டுக்கு முன், தமிழகத்தின், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

அவர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும். கூட்டணி குறித்து உரிய நேரத்தில், சரியான முறையில் அறிவிப்பு வரும். நானும் கட்சியின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட விஜய பிரபாகரனும், தமிழகத்தின் பட்டி, தொட்டிகள்தோறும் சென்று, மக்களை சந்திக்க உள்ளோம்.

பலம் தெரியும்


கட்சியின் இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் பேசியதாவது: கட்சியினர் அனைவரும், நல்ல மொபைல் போன் வாங்க வேண்டும். அதன் வாயிலாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டும். நம் கட்சியை, 1 சதவீத ஓட்டு கூட இல்லை என, விமர்சிக்கின்றனர். யானை நடக்க நடக்கத்தான் வழி தெரியும் எனக் கூறுவர்.

அதுபோல உங்கள் கருத்துகளை கூறுவதால் மட்டும் தான், நம் பலம், மற்றவர்களுக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மத்தியில் வென்று காட்டி, நம் கட்சியினர் கோட்டைக்குச் செல்ல வேண்டும்.

அனைத்து மேடைகளுக்கும் துவக்கத்தில் இருந்தே, பேன்ட் - சட்டை அணிந்து வரும் நபர் நான் தான். இந்த பொதுக்குழு வாயிலாக தே.மு.தி.க., 2.0 ஸ்டார்ட் ஆகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்குழுவில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் பலரும், எத்தனை நடிகர்கள் அரசியல் கட்சித் துவங்கினாலும், விஜயகாந்துக்கு ஈடாக முடியாது என பேசினர். ஆனால், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

'தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிபடிப்பாக குறைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 10 தீர்மனங்கள், தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த, 2,500 பேருக்கு சிக்கன் பிரியாணி, பாறை மீன் வருவல், முட்டை, வெங்காய பச்சடி, பாயாசம், சாதம், ரசம் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

கடலுாரில் கூட்டணி அறிவிப்பு!


கடலுாரில் அடுத்தாண்டு ஜன., 9ல் நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து, பிரேமலதா அறிவிப்பார். அதில், நாம் யாரோடு கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும். பிரேமலதா எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமா அல்லது முதல்வராக வேண்டுமா என்பதை, தொண்டர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.- சுதீஷ், பொருளாளர், தே.மு.தி.க.,








      Dinamalar
      Follow us