தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆலைகளுக்கு பாதுகாப்பு விதிகளை உருவாக்க முடிவு

 ஆலைகளுக்கு பாதுகாப்பு விதிகளை உருவாக்க முடிவு

 ஆலைகளுக்கு பாதுகாப்பு விதிகளை உருவாக்க முடிவு


ADDED : ஆக 26, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், அமோனியா பயன்படுத்தும் ஆலைகளில் பின்பற்ற வேண்டிய, கட்டாய பாதுகாப்பு விதிகளை, தமிழக அரசு உருவாக்க உள்ளது.

தமிழகத்தில், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் உட்பட, 342 ஆலைகளில், அமோனியா பயன்படுத்தப்படுகிறது. இவற்றில், 30,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில், தனியாருக்கு சொந்தமான, இறால் பதப்படுத்தும் ஆலையில் உள்ள, டேங்கரில் இருந்து அமோனியா வாயு, இந்த ஆண்டு ஜூன் இறுதியில் வெளியேறியது.

அங்கு தங்கியிருந்த பணியாளர்களில் பலர், வாயுவை சுவாசித்து மயங்கினர். அவர்களில், 18 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, அமோனியா பயன்படுத்தப்படும் ஆலைகளில், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது.

ஆய்வின் அடிப்படையில், அமோனியா பயன்படுத்தும் இடத்தில் இருந்து பணியாளர்களை, எவ்வளவு துாரத்தில் தங்க வைப்பது, ஆலைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, தொழில் வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஆலைகள் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை, தொழிலாளர் நலத்துறை உருவாக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us