sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

/

5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

14

ADDED : ஜூலை 14, 2025 01:03 AM

Google News

14

ADDED : ஜூலை 14, 2025 01:03 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடப்பாண்டு பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5.37 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு தோறும் இலவச சைக்கிள் கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 193.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.Image 1442849ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, அத்துறை சார்பில், நடப்பாண்டு 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்நிதியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்கள் வாங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.

சைக்கிளில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 26' என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சைக்கிள்கள் வழங்கப்பட உள்ள மாணவர்கள் விபரம்:

வகுப்பு மாணவர்கள் மாணவியர் மொத்தம்பிற்படுத்தப்பட்டோர் 83,581 1,08,207 1,91,788மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 81,952 1,00,311 1,82,263ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 68,687 87,780 1,56,467இதர பிரிவினர் 2,652 3,575 6,267மொத்தம் 2,32,872 2,99,873 5,36,745

      Dinamalar
      Follow us