sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு

/

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு


ADDED : மார் 08, 2024 12:43 AM

Google News

ADDED : மார் 08, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

கூட்டணி தொடர்பான முடிவு எடுக்க, ஏற்கனவே கட்சியினர் எனக்கு அதிகாரம் அளித்து விட்டனர். மூன்றாவது முறையாக, பிரதமர் பதவிக்கு மோடியை தேர்ந்தெடுக்க, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.

டவுட் தனபாலு:

நல்லவேளை செய்தீங்க... எங்கடா, உங்க கட்சியின் ஆதரவு கிடைக்காம, மோடியால மறுபடியும் பிரதமராக முடியுமான்னு பா.ஜ.,வினர், 'டவுட்'ல இருந்தாங்க... ஒருவழியா அவங்க கூட்டணியில ஐக்கியமாகி, அவங்க வயித்துல பாலை வார்த்துட்டீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

---

பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலர் மருது அழகுராஜ்:

'நீங்க நலமா, நமக்கு நாமே' என்றெல்லாம், விதவிதமாக பேரு வைக்கிற, பேரு போன தி.மு.க., ஆட்சியில், மணல் விக்கிறவன், மது பார் நடத்துறவன், போதை மருந்து கடத்துறவன், கூலிக்கு ஆட்களை போட்டுத் தள்ளுறவன், இவர்களிடம் பிடுங்கி திங்கிறவன் மட்டும் தான் நலமாக இருக்கான். மத்தபடி செந்தில் பாலாஜி, பொன்முடி வரைக்கும் யாரும் நலமா இல்லை.

டவுட் தனபாலு:

அடடா... ஆளுங்கட்சியில இருக்கிற, 'மாஜி'க்களே நலமா இல்லாததை, அந்த கட்சியினரே கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை... எதிர் வரிசையில் இருந்தாலும், அவங்க மனக்குமுறல்களை படம் போட்டு காட்டிய உங்களை, அந்த ரெண்டு பேரும் மனசார வாழ்த்துவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

---

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி:

நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வரே, நலத் திட்டங்கள் நின்று போச்சு; சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு போச்சு; சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்தாச்சு; விலைவாசி விண்ணை தொட்டாச்சு; எங்கு காணினும் போதைப் பொருள் புழக்கம் என்ற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு. இப்படி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்ட உங்கள் விடியா ஆட்சியில், மக்கள் நலமாக இல்லை.

டவுட் தனபாலு:

அடடா... முதல்வரின் எந்த திட்டத்துக்கும் இப்படி எதிர்வினைகள் வந்ததே இல்லையே... ஒண்ணும் மட்டும் உறுதி... இப்படி ஒரு திட்டத்தை துவங்கலாம்னு ஐடியா கொடுத்த அதிகாரிகளுக்கு துாக்கம் போயிருக்கும் என்பதில் மட்டும், 'டவுட்'டே இல்லை!






      Dinamalar
      Follow us