ADDED : செப் 30, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் வழக்கமான நாட்களில், ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும், 100 முதல், 200 பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும். முகூர்த்த நாட்களில் அதிகபட்சமாக, 300 பத்திரங்கள் வரை பதிவுக்கு தாக்கலாகும்.
பெரும்பாலான அலுவலகங்களில் நேற்று, 'சர்வர்' பிரச்னையால் பதிவு பணிகள் தாமதமாகின. சில இடங்களில் பதிவுக்கு வந்தவர்கள், நீண்ட நேர காத்திருப்புக்கு பின் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், இதே போன்று பிரச்னை ஏற்பட்டது. பதிவுத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி தொழில்நுட்ப பிரிவினர் சரி செய்தனர். ஆனால், நேற்று சார் பதிவாளர்கள் புகார் தெரிவித்தும், கோளாறை சரி செய்ய தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.