UPDATED : நவ 27, 2026 09:26 PM
ADDED : நவ 27, 2026 09:26 PM
* ‘வீ தி லீடர்’ அமைப்பு நிறுவனர் அண்ணாமலை: தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருக பக்தர்கள் தீபம் ஏற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியாவது, தமிழக அரசு, தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும், சற்று ஒதுங்கி நின்று, முருக பக்தர்கள் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிட வேண்டும்.
* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பரங்குன்றம் தீப வழக்கில், ‘தமிழகத்தில் நிர்வாக சீர்கேடு நிலவுகிறது; அதிகாரிகள் அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளனர்’ என உச்ச நீதிமன்றம் சாடியிருப்பது, முதல்வர் விஜய் அரசுக்கு விழுந்த மாபெரும் சம்மட்டி அடி. த.வெ.க., அரசின் ஹிந்து விரோத போக்கிற்குக் கிடைத்த தக்க பதிலடி.
மத்திய படையான சி.ஆர்.பி.எப்., பாதுகாப்புடன் தீபத்துாணியில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பைக் கேட்ட பின்னும், முதல்வராக நீடிக்க விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. துளியளவேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால், இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
* பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை : திருப்பரங்குன்றம் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தமிழக அரசுக்கான சம்மட்டி அடி. இது ஹிந்துக்களின் வெற்றி அல்ல; தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. முருகப்பெருமானுக்கு கிடைத்த வெற்றி.
* பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பிரபு: இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தலை குனிந்து நிற்பதற்கு, த.வெ.க.,வின் கூட்டணி கட்சிகளே காரணம்.
* இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்துவது அரசின் அடிப்படை கடமை. மக்களின் வழிபாட்டு உரிமைகளையும், மத உணர்வுகளையும் மதித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
