திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்
ADDED : ஏப் 20, 2026 12:55 AM

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்து பேசியதாவது:
தி.மு.க., அமைச்சர்களும் எம்.எல்.ஏ.,க்களும் பகிரங்கமாக ஊழல் செய்கின்றனர். தி.மு.க., அமைச்சர் ஒருவரையும் அவருடைய மனைவியையும் சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளி எனக் கூறியிருக்கிறது.
சட்டவிரோத கனிம வளக் கொள்ளை வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்துள்ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது கிட்னி கடத்தல் புகார் உள்ளது.
அதுகுறித்து விசாரணை நடக்கிறது. கிட்னியை திருடினால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனாலேயே, தி.மு.க.,வை விரட்டியடிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, அப்பாவிகள் உயிரிழந்ததற்கு தி.மு.க., அரசே காரணம். தி.மு.க.,வினர் முருக வழிபாட்டு உரிமையை பறிக்கின்றனர். ஹிந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்கின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற விடாமல் தடுக்கின்றனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அதை செயல்படுத்தவில்லை. அதனால், நம் ஆட்சி அமைந்ததும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பார்லிமென் டில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை, காங்., - தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆதரிக்காமல் தடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
