திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம்; உற்சாகத்தில் பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம்; உற்சாகத்தில் பக்தர்கள்!
ADDED : நவ 28, 2026 07:30 AM

- நமது சிறப்பு நிருபர் -
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கின்றனர்.
நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது. கார்த்திகை தீப நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் வரை ஹிந்து அமைப்பினர் சென்று போராடி அனுமதி பெற்றனர். ஆனாலும் திமுக அரசு பாணியில் தவெக அரசும் தீபம் ஏற்ற மறுத்துவிட்டது.
அறங்காவலர் குழு, கோவில் நிர்வாகம் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சித்தது. முருகனின் அருளால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட் இன்றே தீபம் ஏற்ற அதிரடி உத்தரவிட்டது. மாலை தீபம் ஏற்றப்பட இருக்கிறது.
கமென்டில் பதிவிடுங்கள்!
தீபத்தூணில் தீபம்... உற்சாகாத்தில் முருக பக்தர்கள்… ஒலிக்கும் அரோகரா கோஷம்…
கமென்டில் கருத்துக்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள் வாசகர்களே!
