ADDED : ஜூலை 30, 2011 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காட்டு பகுதிக்குள் நாய் கடித்ததால், உயிருக்கு போராடிய மான், வனத்துறையினரின் அலட்சியத்தால் இறந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கரபதி காட்டிற்குள் ஏராளமான மான்கள் உள்ளன. உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் இரவு நேரங்களில் மான்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவது உள்ளது. நேற்று காலை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி பின்புறமுள்ள காட்டு பகுதியில் நாய் கடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மான் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஒரு மணி நேரமாகியும் அதிகாரிகள் வராததால், அந்த மானை கல்லூரி மாணவர்கள் டூ வீலர் மூலம் காரைக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். டாக்டர் இல்லாததால் சில நிமிடத்தில் மான் பரிதாபமாக இறந்தது.