குறை தீர்ப்பாளரை நியமிக்க தாமதம் மேல்முறையீட்டு மனுக்கள் தேக்கம்
குறை தீர்ப்பாளரை நியமிக்க தாமதம் மேல்முறையீட்டு மனுக்கள் தேக்கம்
ADDED : நவ 27, 2025 12:44 AM
சென்னை: தமிழக மின் வாரியம், 45 மின் பகிர்மான வட்டங் களாக செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு மின் குறைதீர் மன்றம் உள்ளது; இது, ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
புதிய மின் இணைப்பு வழங்க தாமதம், மின் தடை உள்ளிட்ட சேவைகளால் பாதிக்கப்படுவோர், இதில் புகார் அளிக்கலாம். அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்க விரும்பாதவர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
மின் வாரியத்தின் மீது தவறு இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க, மின் குறை தீர்ப்பாளர் உத்தரவிடுவார். குறை தீர்ப்பாளராக இருந்த கண்ணன் என்பவர் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த செப்., முதல், குறை தீர்ப்பாளர் பதவி காலியாக உள்ளது.
இந்த பதவிக்கு புதிய நபரை நியமிக்க, அக் டோபரில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விண்ணப்பங்களை பெற்றது.
அதில், தேர் வான மூன்று நபர்களின் பெயர்கள், தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டன. அப்பட்டியலில் இருந்து ஒருவரை குறை தீர்ப்பாளராக, அரசு நியமிக்க வேண்டும்.
இதில் தாமதம் செய்யப்படுவதால், மின்சார மேல்முறையீட்டு மனுக்கள் தேக்கமடைந்து, நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

