தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம்

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம்

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம்


UPDATED : நவ 23, 2026 08:42 PM

ADDED : நவ 23, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:42 PM ADDED : நவ 23, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட, 2,202 பேருக்கு எதிரான போக்குவரத்து துறை மோசடி வழக்கில், குற்றப்பத்திரிகை நகல் வழங்க, கால தாமதம் ஏற்படும் என்பதால், வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 வரையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துறை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த காலத்தில், ஓட்டுனர் உள்ளிட்ட பணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, 1.75 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நான்கு தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இவற்றில், மூன்று வழக்கில் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும், சென்னை எம்.பி., – எம்.எல்.ஏ., க்கள் வழக்குகளுக்கான, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி உட்பட 2,202 பேர் தொடர்புடைய ஒரு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலை ‘பென் டிரைவ்’ வழியே வழங்கும் பணி, இம்மாதம் 5ம் தேதி துவங்கியது.

வாரம் 50 பேர் வீதம், இதுவரை 150 பேருக்கு ‘பென் டிரைவ்’ வழங்கப்பட்டு உள்ளன. இதே வேகம் தொடர்ந்தால், 2,202 பேருக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்க, 10 மாதங்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கும் பணிகள் முடிந்து, அடுத்த கட்ட விசாரணை நடந்து, 2,202 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்து, அதன் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்க, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

இதனால், வழக்கை விரைந்து முடிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில், நகல்களை ஒரே கட்டமாக, அனைவருக்கும் வழங்கும் வகையில், அரசு தரப்பில் இடம் ஏற்பாடு செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us