தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘டெண்டர்’ வெளியீட்டில் தாமதம் பாடப்புத்தகம் அச்சிடும் பணியில் சிக்கல்

‘டெண்டர்’ வெளியீட்டில் தாமதம் பாடப்புத்தகம் அச்சிடும் பணியில் சிக்கல்

‘டெண்டர்’ வெளியீட்டில் தாமதம் பாடப்புத்தகம் அச்சிடும் பணியில் சிக்கல்


UPDATED : நவ 23, 2026 07:56 PM

ADDED : நவ 23, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:56 PM ADDED : நவ 23, 2026 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான, ‘டெண்டர்’ அறிவிப்பில் தாமதம் நீடிப்பதால், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாடநுால் அச்சிடுவோர் நலச் சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் கூறியதாவது:

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 50,000 டன் காகிதத்தை பயன்படுத்தி, பாடநுால்களை அச்சிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில், 500க்கும் அதிகமான அச்சகங்கள் உள்ளன. ஆனால், வெளிமாநிலத்தை சேர்ந்த அச்சகங்களுக்கும் பாடநுால் அச்சிட டெண்டர் வழங்கப்படுகிறது.

தற்போது, புத்தகம் அச்சிடுவதற்கான டெண்டர், கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய டெண்டர் அறிவிக்கப்படவில்லை. பழைய டெண்டரையே நீட்டிக்க, பள்ளிக் கல்வித் துறை பேச்சு நடத்தி வருகிறது.

ஆனால், கடந்த டெண்டரில், டன்னுக்கு 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை 10 சதவீதம் உயர்த்த வேண்டும் என்கிறோம். அதனால், டெண்டர் நீட்டிப்புக்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

டெண்டர் வெளியீட்டில் தாமதம் நீடித்தால், அடுத்த கல்வியாண்டில், குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர்களுக்கு பாடநுால்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

எனவே, பாடநுால்களை அச்சிடுவதற்கான அறிவிப்பை, அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை போல, தமிழக அரசும், தமிழகத்தை சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டுமே பாடநுால் அச்சிட, டெண்டர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us