ஒரே நாளில் டில்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்
ஒரே நாளில் டில்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்
UPDATED : டிச 09, 2024 09:51 AM
ADDED : டிச 09, 2024 09:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் இன்று 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடக்கிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(டிச.,09) டில்லியில் 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: வெடிகுண்டுகள் வெடிக்கும் போது பலருக்கு காயம் ஏற்படும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். 30 ஆயிரம் டாலர் கொடுத்தால் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யப்படும் மர்மநபர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.