sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மிருதங்க வித்வான் வேடத்தில் முத்திரை பதித்த டெல்லி கணேஷ்!

/

மிருதங்க வித்வான் வேடத்தில் முத்திரை பதித்த டெல்லி கணேஷ்!

மிருதங்க வித்வான் வேடத்தில் முத்திரை பதித்த டெல்லி கணேஷ்!

மிருதங்க வித்வான் வேடத்தில் முத்திரை பதித்த டெல்லி கணேஷ்!

6


ADDED : நவ 10, 2024 11:41 AM

Google News

ADDED : நவ 10, 2024 11:41 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தாலும், அவற்றில் சில படங்கள் அவருக்கு பெயர் பெற்று தருபவையாக அமைந்துள்ளது.

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கிய நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் சினிமா படங்கள் மட்டுமின்றி, டிவி சீரியல்கள், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். அவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதில் பெரும்பாலும் கமலுடன் சேர்ந்து நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த வகையில், டெல்லி கணேஷ்க்கு பெயர் வாங்கி தந்த சில படங்கள்

ராகவேந்திரர்

1985 ல் ராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஸ்ரீராகவேந்திரர் படம் எடுக்கப்பட்டது. ரஜினி கதாநாயகனாக நடித்த இப்படத்தில், ராகவேந்திர சுவாமிகளின் முதன்மை சீடர் அப்பனாச்சாரியார் வேடத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்தார்.

சிந்துபைரவி

1985ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி கதாபாத்திரத்தில் மிருதங்க வித்வானாக டெல்லி கணேஷ் நடித்தார். அப்படத்தில் உண்மையான மிருதங்க வித்வான்கள் போல் நடித்து அவர்களின் முகபாவனைகள், உடல்மொழியை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படம் குறித்து டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் கூறுகையில், எனக்கு இசை தெரியாது. அதில் ஆர்வம், விருப்பம் உள்ளது. சங்கீத ஞானம் உண்டு. என் மீது முதலில் பாலச்சந்தருக்கு விருப்பம் இல்லை. மிருதங்க வித்வான் செய்வதை போன்று நான் செய்ததை பார்த்து பாலசந்தருக்கு பிடித்துவிட்டது. படம் வெளியான பிறகுபெங்களூருவில் அவரை சந்தித்தேன். சிந்துபைரவி படத்தில் உனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இவ்வளவு பெயர் வரும் என எதிர்பார்க்கவில்லை. நிறைய கடிதம் வருகிறது. அனைவரும் உன்னை பாராட்டுகின்றனர் என பாலச்சந்தர் தெரிவித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

இதேபோன்று 1999ம் ஆண்டு ரகுமான் கதாநாயகனாக நடித்த சங்கமம் படத்திலும் மிருதங்க வித்வானாக டெல்லி கணேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நாயகன்

1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்து வெளியான 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழி பெயர்ப்பாளராக பக்கபலமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் தனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்ததாக டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வில்லன் வேடத்தில் பிரான்சிஸ் அன்பரசு என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். இதிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

மைக்கேல் மதன காமராஜன்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமலின் வளர்ப்பு தந்தையாக, பாலக்காடு மணி ஐயர் என்ற வேடத்தில் நடித்தார். இதிலும் தன் வழக்கமான நகைச்சுவை முத்திரையை பதித்தார் டெல்லி கணேஷ்.

அவ்வை சண்முகி

இந்த படத்தில் சேதுராம ஐயர் வேடத்தில் ஜெமினி கணேசன் உதவியாளராக நடித்து இருப்பார். நாசரை கேள்வி கேட்கும் இடத்திலும், பெண் வேடத்தில் இருக்கும் கமலை கண்டுபிடிப்பதற்காக அவரை பின் தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் அடிவாங்கும் போதும் டெல்லி கணேஷ் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்

தெனாலி படத்தில் டாக்டர்

2000ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தெனாலி படத்தில் டாக்டர் வேடத்தில் பஞ்சபூதம் என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்து இருந்தார். தன்னை விட புகழ் பெற்றவராக இருக்கும் ஜெயராம் மீது பொறாமை கொண்டு அவரை பழிவாங்குவதற்காக, தன்னிடம் மனநோய் சிகிச்சை பெற வந்த கமலை அவரிடம் அனுப்பி வைத்து இருப்பார். அதன் மூலம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் டெல்லி கணேஷ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. படம் முழுதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.






      Dinamalar
      Follow us