ADDED : பிப் 20, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வ.உ.சி., குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., குறித்து அவதுாறாக பேசியதற்காக, எம்.பி., ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

