UPDATED : ஜன 18, 2024 03:56 AM
ADDED : ஜன 18, 2024 02:03 AM

சென்னை:தமிழகத்தில் ஜன., மாதத்தில் இதுவரை 922 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வாரங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் குளிர் மற்றும் மழை காலங்களில் தீவிரமாக பெருக்கமடைகின்றன. கடந்தாண்டில் மட்டும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.
பருவமழை காலமான, அக்., முதல் டிச., மாதம் வரை, 4,500க்கும் மேற்பட்டோருக்கு, டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஜன., மாதம் துவங்கி, 17 நாட்களில், 922 பேர், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், மூன்று வாரங்களில் கட்டுக்குள் வரும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-செல்வவிநாயகம்,
இயக்குனர்,
பொது சுகாதாரத் துறை