ADDED : ஆக 20, 2026 11:19 PM

சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டசபையில் நேற்று கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், '108' ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மிக அதிகமாக 55,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், தமிழகத்தில் தான் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர, ஊதிய உயர்வும் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 10 சதவீதம் வழங்கப்படுகிறது.
பருவ மழைக்காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பை உணர்ந்து, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, மக்கள் நல்வாழ்வு துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு இம்மாதம் 19ம் தேதி வரை, 12,005 நோயாளிகளும், நான்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் 1,379 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, ஜூலையில் 2,312 ஆக உயர்ந்துள்ளது. இதனால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு கூறினார்.
