மருத்துவமனைக்குள் புகுந்து பல் டாக்டர் மீது தாக்குதல்
மருத்துவமனைக்குள் புகுந்து பல் டாக்டர் மீது தாக்குதல்
UPDATED : அக் 07, 2026 09:39 PM
ADDED : அக் 06, 2026 06:15 PM
திருச்சி: மணப்பாறை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, பல் டாக்டரை தாக்கியவரை, போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஸ்டேட் வங்கி எதிரே 'பதி' என்ற பெயரில், தனியார் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் குமார், 47. இவரது குடும்ப நண்பர், திருச்சி கே.கே.நகர் சிம்கோ மீட்டர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 46. இவர், சில நாட்களாக டாக்டர் குமாரிடம், 5 லட்சம் ரூபாய் கடன் தருமாறு கேட்டு வந்துள்ளார். டாக்டரோ, 'நான், இப்போது தான் மருத்துவமனை கட்டியுள்ளேன். என்னிடம் பணம் இல்லை' என கூறி வந்துள்ளார்.
நேற்று முன்தினம், மணப்பாறையில் உள்ள பதி பல் மருத்துவமனைக்கு வந்த செந்தில்குமார், குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், டாக்டரை செந்தில்குமாரிடம் இருந்து விலக்கி காப்பாற்றினர். மணப்பாறை போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
