துணை முதல்வர் என்பது டம்மியான பதவி: பன்னீர் செல்வம் "ஓபன் டாக்"
துணை முதல்வர் என்பது டம்மியான பதவி: பன்னீர் செல்வம் "ஓபன் டாக்"
UPDATED : ஜன 04, 2024 06:24 PM
ADDED : ஜன 04, 2024 05:24 PM

காஞ்சிபுரம்: துணை முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மியான பதவி என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் என நான் சொன்னதை இ.பி.எஸ்.,ஏற்க மறுத்தார். அவர் பொதுச்செயலாளராக தொடரக்கூடாது என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடந்து வருகிறது. துணை முதல்வர் பதவி எனக்கு கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டது. அந்தப்பதவியை நான் வேண்டாம் என கூறினேன். அது டம்மி பதவி அதிகாரம் இல்லாத பதவி. என்னை கட்டாயப்படுத்தி அந்த பதவியைக் கொடுத்தார்கள்.
பிரதமர் மோடிக்கு துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,. பிரதமரின் 10 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்தது அடுத்து வரக்கூடிய லோக்சபா தேர்தலில் கூட மோடி தான் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வரவேண்டும். லோக்சபா தேர்தலை பொருத்தவரையிலும் பா.ஜ., தலைமையில் தான் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.