ADDED : டிச 05, 2024 02:41 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா புளியங்குடியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு பணத்தை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை பி.டி.ஓ., பால்பாண்டியை 58, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி கிராமத்தில் அருந்ததியர் காலனியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கும் பணியை ஒப்பந்தாரர் முடிந்துள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் ஏற்கனவே விடுவிக்கப் பட்டுள்ளது. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை பி.டி.ஓ., பால்பாண்டியனிடம் மீதி தொகையை விடுவிக்குமாறு ஒப்பந்ததாரர் கேட்டார். அப்போது பால்பாண்டி ரூ.3000 தனக்கும், ரூ.2000 அலுவலக செலவிற்கும் வழங்குமாறு கூறினார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.5000த்தை முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., பால்பாண்டியனிடம் ஒப்பந்ததாரர் கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராமசந்திரன் தலைமையிலான போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.