தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும்...! திருமாவளவன் வெளிப்படை
தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும்...! திருமாவளவன் வெளிப்படை
UPDATED : மார் 03, 2025 08:12 PM
ADDED : மார் 03, 2025 07:46 PM

மதுரை:'தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு சிக்கல். ஆகவே இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்கிறார்கள்.
மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் போராட்டம் நடத்துகிறோம். ஒரு நெருக்கடியும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தை ஒரு அங்கம். கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைக்கும் பங்கு உள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் விடுதலை சிறுத்தைக்கு உள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.