ADDED : ஜன 22, 2024 03:51 AM

தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அறிக்கை:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாடு முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதசார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில், ஹிந்து மத விரோத செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது; பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று போலீசார் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவில்கள் பக்தர்களுக்கு சொந்தமானவை. கோவில் நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ, தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
அரசின் தடையை மீறி, அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் விழாவுக்காக, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும்.