ADDED : நவ 14, 2025 11:33 PM
சென்னை: பணமோசடி வழக்கில் சிக்கிய தேவநாதன், நீதி மன் றத்தில் சரணடைந்து மீண் டும் கை து செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் தேவநாதன், 63.
இவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவநாதன் மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், 'டான்பிட்' எனும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், 100 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஆனால், தேவநாதன் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்றாமல், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை மனு தாக்கல் செய்தார். இம்மனுக்குள் தள்ளுபடி செய்யப்பட்டன.
'டான்பிட்' மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், தேவநாதனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டன. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேவநாதன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, டான் பிட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு, 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட் டார்.

