யானை இன்றி அம்மன் பரிவேட்டை அரசை எதிர்த்து பக்தர்கள் போராட்டம்
யானை இன்றி அம்மன் பரிவேட்டை அரசை எதிர்த்து பக்தர்கள் போராட்டம்
ADDED : அக் 13, 2024 05:45 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 3ல் துவங்கியது. தினமும், தேவி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடந்தது. விஜயதசமியான நேற்று அம்மன் பரிவேட்டைக்கு பஞ்சலிங்கபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
மேளதாளம் முழங்க புறப்பட்ட பவனி மாலை, 6:30 மணிக்கு பஞ்சலிங்கபுரத்தில் வந்ததும் பரிவேட்டை நடந்தது. பானாசுரனை வதம் செய்த தேவி, பின்னர் கோவிலுக்கு எழுந்தருளினார். பரிவேட்டை ஊர்வலத்திற்கு அலங்கரிக்கப்பட்ட யானை பயன்படுத்தப்படும். இம்முறை பல்வேறு காரணங்களை கூறி தேவசம்போர்டு யானை பவனியை தவிர்த்தது.
இதை எதிர்த்து பக்தர்கள் அமைப்பினரும், ஹிந்து இயக்கத்தினரும் மரத்தில் செய்யப்பட்ட யானையை கொண்டு வந்து அலங்கரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த யானையின் பாதத்தில், 'இது திராவிட மாடல் யானை; திராவிட மாடல் கட்சிக்கு ஓட்டளித்த கன்னியாகுமரி சுற்று வட்டார ஹிந்துக்களுக்கு இந்த யானை தான் பரிசா?' என, எழுதியிருந்தனர். மேலும் அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.