sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., அரசின் அலட்சியத்தால் தைப்பூச நாளில் பக்தர்கள் அவதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

/

 தி.மு.க., அரசின் அலட்சியத்தால் தைப்பூச நாளில் பக்தர்கள் அவதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

 தி.மு.க., அரசின் அலட்சியத்தால் தைப்பூச நாளில் பக்தர்கள் அவதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

 தி.மு.க., அரசின் அலட்சியத்தால் தைப்பூச நாளில் பக்தர்கள் அவதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

1


ADDED : பிப் 02, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தைப்பூச திருநாளில், திருச்செந்துார், பழனி, மருதமலை, சென்னிமலை, சமயபுரம் உள்ளிட்ட பல கோவில்களுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

கால் கடுக்க பல கி.மீ., துாரம் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தருவதே அறநிலையத் துறையின் கடமை.

ஆனால், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அறநிலையத்துறை நிர்வாகம், சிறப்பு தரிசன கட்டணத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது, பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

தைப்பூச திருநாளில், முருகன் கோவில்களில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். '4,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தோம்' என, மார்தட்டி கொள்ளும் தி.மு.க., அரசு, கோவில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை.

வீண் பெருமை பேசாமல், அனைத்து ஹிந்து பண்டிகை நாட்களிலும், கோவில்களில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us